நீர் தோசை மிகவும் மிருதுவான, எளிதாக செய்யகூடிய காலை உணவு. மிகவும் விரைவாக செய்யகூடிய தோசை வகைகளில் இதவும் ஒன்று. தோசை கல் சூடானவுடன் ஒவ்வொரு தோசையையும் சுமார் 45 முதல் 60 நொடிகளில் தயார் செய்து விடலாம். காலை நேர பரபரப்புக்கு ஏற்ற காலை உணவு இது.



Neer Dosai
Neer Dosai
தேவையான பொருட்கள்

பச்சரிசி - 1 கப் ( 250 கிராம்)
துருவிய தேங்காய் - 1 மேஜை கரண்டி 
உப்பு - தேவைகேற்ப 
தண்ணீர் - 3 கப் ( 750 மி.லி)
சமையல் எண்ணை - 1/2 டீஸ்பூன் (ஒரு தோசைக்கு)

செய்முறை 
  1. அரிசியை கழுவி சுமார் இரண்டு கப் தண்ணீரில் சுமார் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். 
  2. ஒரு மணி நேரத்திற்கு பிறகு தண்ணீரை வடிகட்டி,அரிசியை  மிக்ஸ்யில் எடுத்துகொள்ளவும். இதனுடன் துருவிய தேங்காயை சேர்க்கவும். 
  3. சுமார் ஒரு கப் தண்ணீரை போதிய இடைவெளியில் மிக்ஸ்யில் சிறிது சிறிதாக  சேர்த்து அரிசியை நன்றாக அரைத்துக்கொள்ளவும்.   
  4. அரைத்த மாவு தயாராகி விட்டது. ஆனால் இந்த மாவு மிகவும் கட்டியாக இருக்கும். நாம் செய்ய போவது நீர் தோசை. அரைத்த மாவுடன் சுமார் இரண்டு கப் தண்ணீரை கலந்து கொள்ளவும். 
  5. தோசை கல்லை சூடு பண்ணவும். கல் நன்றாக சூடானவுடன் மாவை நன்றாக கலக்கி ஒரு அகப்பை மாவை கல்லில் ஊற்றவும். 
  6. மாவு மிகவும் தண்ணீராக இருப்பதால் மற்ற தோசைகளுக்கு பண்ணுவது போல் அகப்பையால் நாம் தோசையை பரப்பி விட முடியாது. மற்றும் இந்த தோசை வட்ட வடிவில் வருதும் கடினம்.
  7. சிறிது சமையல் எண்ணையை தோசை மேல் ஊற்றி தோசை வெந்தவுடன்  எடுத்துவிடவும். தோசை மிகவும் மெல்லிதாக இருப்பதினால் அடுத்த பக்கத்தை வேக வைக்க வேண்டிய அவசியம் இல்லை. 
  8. நீர் தோசை ரெடி. சுட சுட தோசையை மிளகாய் பொடி அல்லது சட்னியுடன் பரிமாறவும். 
Next
புதிய இடுகை
Previous
This is the last post.

கருத்துரையிடுக

 
Top