மோர் ரசம் மற்ற ரசங்களில் இருந்து மிகவும் மாறுபட்டது. நாம் ரசத்துக்கு பயன்படுத்தும் புளி மற்றும் தக்காளியை இதில் பயன்படுத்தாமல் மோரை புளிப்பிற்காக பயன்படுத்துகின்றோம். மிகவும் எளிதாக, விரைவாக அதே நேரத்தில் சுவையாக இந்த ரசம் இருக்கும்.
தேவையான பொருட்கள் :
புளித்த தயிர் - 250 மி.லி.
தண்ணீர் - 250 மி.லி.
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு.
அரைத்துக்கொள்ள :
துவரம் பருப்பு - 1 தேக்கரண்டி
மிளகு - 2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
தாளித்து கொள்ள :
நெய் (அல்லது சமையல் எண்ணெய்) - 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை
தேவையான பொருட்கள் :
புளித்த தயிர் - 250 மி.லி.
தண்ணீர் - 250 மி.லி.
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு.
அரைத்துக்கொள்ள :
துவரம் பருப்பு - 1 தேக்கரண்டி
மிளகு - 2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
தாளித்து கொள்ள :
நெய் (அல்லது சமையல் எண்ணெய்) - 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை
- துவரம் பருப்பு, மிளகு, சீரகத்தை நன்கு சிவக்க வருதுக்கொள்ள வேண்டும். ஆறிய பிறகு இவற்றறை மிக்ஸ்யில் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அறைத்து கொள்ளவும்.
- தயிரில் ஒரு கப் தண்ணீரை சேர்த்து நன்கு கலக்கவும். அறைத்த கலவையை இதில் சேர்த்து மீண்டும் நன்கு கலக்கவும்.
- சிறிது மஞ்சள் தூள் சேர்த்து இந்த கலவையை குறைந்த சூட்டில் சூடு செய்யவும். ரசம் நுரைத்து வரும்போது அடுப்பில் இருந்து இறக்கவும். ரசத்தை கொதிக்க விட கூடாது.
- கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து ரசத்தில் சேர்க்கவும்.
மோர் ரசம் ரெடி.
கருத்துரையிடுக