புரோக்கோலி மிகவும் சத்துள்ள, டாக்டர்களால் மிகவும் பரிந்துரைக்கப்படும் காய்கறிகளில் ஒன்று. புரோக்கோலி முட்டைகோஸ் தாவர  இனத்தை சார்ந்தது. இதில் உள்ள பூவை நாம் காய்கறியாக உபயோக படுத்துகிறோம். 

கொத்தவரங்காய், பீன்ஸ், வாழைபூ உசிலியை ரசித்தவர்கள் கண்டிப்பாக புரோக்கோலி உசிலியயும் கண்டிப்பாக ரசிப்பார்கள். 

தேவையான பொருட்கள்:

புரோக்கோலி - 2  (அல்லது 500 கிராம்)
துவரம் பருப்பு - 100 கிராம்
கடலை பருப்பு - 100 கிராம் 
காய்ந்த மிளகாய் - 2
பெருங்காயம் - 1/4 டி ஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு.
மஞ்சள் தூள் - 1/4 டி ஸ்பூன் 
சமையல் எண்ணை - 1  டீஸ்பூன் 
கடுகு - 1 டி ஸ்பூன் 
உடைத்த உளுத்தம் பருப்பு - 1 டி ஸ்பூன் 

செய்முறை :

  1. முந்தைய நாள் இரவில் பருப்புகளை தண்ணீரில் ஊற வைத்து விடவும். குறைந்தது 12 மணி நேரம் பருப்பு ஊற வேண்டும். 
  2. புரோக்கோலியில் இருந்து பூக்களை தனியாக எடுத்துகொள்ளவும் 
  3. வாணலியை சூடு செய்து, எண்ணை  சேர்த்து கடுகு, உளுத்தம் பருப்பை தாளித்து கொள்ளவும். 
  4. இதனுடன் புரோக்கோலியை சேர்த்து வதக்கவும். உப்பு, மஞ்சள் போடி சேர்த்து ஒரு 5 நிமிடம் வதக்கவும். வதங்கிய புரோக்கோலியை தனியாக எடுத்துக்கொள்ளவும். இப்பொழுது உசிலி தயார் செய்யும் முறையை பார்க்கலாம். 
  5. ஊற வாய்த்த பருப்பில் இருந்து தண்ணீரை வடிகட்டி, பருப்புடன், காய்ந்த மிளகாய், உப்பு மற்றும் பெருங்காயம் சேர்த்து மிக்ஸ்யில் தண்ணீர் விடாமல் சிறிது சொர  சொரப்பாக அரைத்துக்கொள்ளவும். 
  6. வாணலியை சூடு செய்து சிறிது எண்ணை சேர்த்து அரைத்த பருப்பு மாவை சேர்க்கவும். அடுப்பை குறைந்த நெருப்பில் எரிய விடவும். 
  7. சிறிது நேர்த்தி பருப்பு சிறிய சிறிய கட்டியாக உடைந்து நன்கு வெந்து விடும். 
  8. இதனுடன் வதக்கி வைத்த புரோக்கோலியை சேர்த்து நன்று கலக்கி அடுப்பில் இருந்து இறக்கவும். 
புரோக்கோலி பருப்பு உசுலி ரெடி !.

கருத்துரையிடுக

 
Top