வெள்ளை பூசணி  வைத்து செயப்படும் காசி ஹல்வா மிகவும் பிரபலமான ஹல்வா. திருமண வைபவங்கள் மற்றும் பல சுப வைபவங்களில் இதை டிசெர்டாக பரிமாறுவார்கள்.

தேவையான பொருட்கள்

துருவிய வெள்ளை பூசணி  - 250 கிராம்
சக்கரை - 125 கிராம்
நெய் - 2 மேஜை  கரண்டி
ஏலைகாய் பொடி - 1/4 டி ஸ்பூன்
கேசரி பவுடர் - ஒரு துளி
முந்தரி - 6

செய்முறை


  1. முந்திரியை நெய்யில் வறுத்து எடுத்துக்கொள்ளவும் .
  2. வெள்ளை பூசணி விதையை நீக்கி விட்டு  தொலி சீவி துருவி கொள்ளவும். துருவும் போது  வரும் தண்ணீரை வீணாக்க்வேண்டம். தண்ணீரோடு சேர்த்து துருவி வைத்து கொள்ளலாம்.
  3. ஒரு நான்-ஸ்டிக் சட்டியில் ஒரு தேக்கரண்டி நெய் விட்டு, துருவிய வெள்ளை பூசணியை சேர்த்து நன்கு கிளறவும். பூசணியின் பச்சை வாசனை போன பிறகு ஒரு மூடி போடு மூடி குறைந்த தீயில் பூசணி நன்கு வேகும் வரை  வைக்கவும். ஒரு ஐந்து நிமிடங்களுக்குள் பூசணி வெந்துவிடும்.
  4. பூசணி வெந்தவுடன் சக்கரை மற்றும் கேசரி பௌடரை கலந்து நன்று கலக்கவும் . சக்கரை சேர்த்தவுடன நன்று கிளறவும். சர்க்கரை சேர்த்தவுடன் கொஞ்சம் நீர்துகொள்ளும் தொடர்ந்து கிளற வேண்டும் 
  5. சிறிது நேரத்தில் பூசணி சிறிது பளபளப்பு கொடுத்து சக்கரையுடன் நன்கு கலந்துவிடும். இந்த நேரத்தில் ஏலைகாய் பொடி மற்றும் நெய் சேர்த்து நன்று கிளறவும். சிறிது நேரத்தில் நெய் பூசணியுடன் நன்று கலந்து விடும். சட்டியில் ஒட்டாமல் பந்து போல உருண்டு வரும்போது தீயை அணைக்கவும்.
  6. வறுத்து  வைத்த முந்தரியை  சேர்த்து அடுப்பில் இருந்து இறக்கவும்.
கம கம காசி ஹல்வா ரெடி. 

கருத்துரையிடுக

 
Top