மோர் ரசம் மற்ற ரசங்களில் இருந்து மிகவும் மாறுபட்டது. நாம் ரசத்துக்கு பயன்படுத்தும் புளி மற்றும் தக்காளியை இதில் பயன்படுத்தாமல் மோரை புளிப்பிற்காக பயன்படுத்துகின்றோம். மிகவும் எளிதாக, விரைவாக அதே நேரத்தில் சுவையாக இந்த ரசம் இருக்கும்.

தேவையான பொருட்கள் :

புளித்த தயிர் - 250 மி.லி.
தண்ணீர் - 250 மி.லி.
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு.

அரைத்துக்கொள்ள :
துவரம் பருப்பு - 1 தேக்கரண்டி
மிளகு - 2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி

தாளித்து கொள்ள :
நெய் (அல்லது சமையல் எண்ணெய்) - 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை

  1. துவரம் பருப்பு, மிளகு, சீரகத்தை நன்கு சிவக்க வருதுக்கொள்ள வேண்டும். ஆறிய பிறகு இவற்றறை மிக்ஸ்யில் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அறைத்து கொள்ளவும். 
  2. தயிரில் ஒரு கப் தண்ணீரை சேர்த்து நன்கு கலக்கவும். அறைத்த கலவையை இதில் சேர்த்து மீண்டும் நன்கு கலக்கவும். 
  3. சிறிது மஞ்சள் தூள் சேர்த்து இந்த கலவையை குறைந்த சூட்டில் சூடு செய்யவும். ரசம் நுரைத்து வரும்போது அடுப்பில் இருந்து இறக்கவும். ரசத்தை கொதிக்க விட கூடாது. 
  4. கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து ரசத்தில் சேர்க்கவும். 
மோர் ரசம் ரெடி.

கருத்துரையிடுக

 
Top