சோயா புரத சத்து மிக்க ஒரு உணவுப்பொருள். சோயாவில் தனியாக நறுமணமோ சுவையோ கெடயாது அதனால சொயாவுடன் புதினா மற்றும் சில மசாலா பொருட்களை சேர்த்து பராத்தா செய்தால் சுவையும் ஆரோக்கியமும் சமமாக இருக்கும் குழந்தைங்களும் விரும்பி சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு - 250 கிராம்
சோயா மின்ஸ் - 125 கிராம்
புதினா தழை - 1/4 கப் / 60 கிராம்
பச்சை மிளகாய் - 2
இஞ்சி-பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 1/2
மஞ்சள் போடி - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா போடி - 1 டீஸ்பூன்
சோம்பு - 1/4 டீஸ்பூன்
சீரக போடி - 1/4 டீஸ்பூன்
கொத்தமல்லி தழை நறுக்கியது - 1 டேபிள்ஸ்பூன்
வெண்ணை - 1/4 கப்
எண்ணை - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு.

செய்முறை

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு மற்றும் உப்பு சேர்க்கவும். கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து மிருதுவான மாவாக கலந்து கொள்ள வேண்டும். ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு நன்றாக பெசைந்து ஒரு ஈர துணியில் மூடி வைக்கவும். 15-20 நிமிடங்கள் மாவு ஈரத்துணியில் இருக்கட்டும் 
  2. இதற்கு நடுவில் சோயாவை தயாரித்துகொள்ளலாம். சோயாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு 1/2 கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைக்கவும். 5 நிமிடங்களில் சோயா நன்றாக வெந்து மிருதுவாக ஆகிவிடும். ஒரு கனமான சட்டியில் சிறிது எண்ணை சேர்த்து பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும். சிறிது உப்பு சேர்த்து வதக்கினால் வெங்காயம் சீக்கிரமாகவும் பொன்னிறமாகவும் வதங்கும். எண்ணைவும் அதிகம் தேவைப்படாது. 
  3. வெங்காயம் வந்தங்கியதும் அதனுடன் பொடிதாக நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி-பூண்டு விழுதை சேர்த்து மேலும் 1 நிமிடம் வந்தக்கவும். 
  4. பிறகு பொடிதாக நறுக்கிய புதினா தழையை சேர்க்கவும். அதனையும் 1 நிமிடம் வதக்கவும்.
  5. பிறகு, வெந்த சோயா மின்ஸ் சேர்த்து உப்பு, மஞ்சள் தூள், கரம் மசாலா , sombu சேர்த்து மிதமான தீயில் வதக்கவும். 
  6. சோயாவில் உள்ள தண்ணீர் எல்லாம் போன பிறகு சீராக தூள் மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழையை சேர்த்து ஒரு தடவை கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும். 
  7. பெசைந்து வாய்த்த கோதுமை ம்வாய் 8 சமமான உருண்டைகளாக உருட்டி வைக்கவும். அதே போல சோயா மசாலாவை 8 உருண்டைகளாக வைக்கவும் 
  8. ஒவ்வொரு கோதுமை மாவு உருண்டைகளை சிறிது வட்டமாக தேய்த்து அதற்க்கு நடுவில் சோயா மசாலா உருண்டைகளை வைத்து நன்றாக மூடி மறுபடியும் கோதுமை மாவில் தொட்டுகொண்டுசப்பாத்தி போல தேய்த்துகொள்ள வேண்டும். 
  9. தோசைக்கல்லை அடுப்பில் வைத்து நன்றாக சூடு பறக்க விட வேண்டும். கல் நன்றாக சூடு இருந்தால் தான் பராத்தா நன்றாக வரும். தேய்த்த பராத்தவ்வை ஒவ்வொன்றாக தோசைக்கல்லில் போடு இருபுறமும் வெந்து எடுக்கவும். வெந்த பராத்தாவில் வெண்ணை தடவி வைக்கவும்.
  10. சூடான சோயா மின்ஸ் பராத்தவ்வை தயிர் மற்றும் raitha வுடன் பரிமாறலாம்.

கருத்துரையிடுக

 
Top