கன்யாகுமரியில் முந்திரி கொத்து (சிட்டு உருண்டை) ஒரு பிரபலமான இனிப்பு வகை. பிள்ளையார் சதுர்த்தி அன்று எந்த எளிமையான மற்றும் அருமையான இனிப்பை செய்வது வழக்கம். பச்சை பயிறு, எள்ளு, தேங்காய் மற்றும்வெல்லம்  சேர்த்து பூரணம் செய்ய வேண்டும். அரிசி மற்றும் கோதுமை மாவு வைத்து மாவு தயாரித்து பூரணத்தை அந்த மாவில் தோய்த்து எண்ணெயில் பொரித்து எடுத்தால் சுவையான முந்திரி கொத்து ரெடி. முந்திரி கொத்து என்ற பெயரால் கொண்டுள்ளதால் முந்திரி பருப்புஉபயோகப்படுத்த வேண்டும் என்ற பலரும் நினைப்பார்கள் ஆனால் முந்திரி என்றால் திராட்சை என்றும் பொருள் உண்டு. கொத்துக்கொத்தாக எந்த உருண்டைகளை எண்ணெயில் பொரிப்பார்கள் அதற்காக எந்த இனிப்புக்கு முந்திரி கொத்து என்ற பெயர் வந்தது.



செய்முறை நேரம் மற்றும் பரிமாறும் அளவு:
தயாரிப்பு நேரம் 15 mins
சமைக்கும் நேரம்40 mins
பரிமாறும் அளவு15
செய்முறை வகைஇனிப்பு
சமையல் வகை தென்னிந்தியா
Munthiri Kothu | Chittu Urundai | Green Moong Jaggery Modak
Munthiri Kothu | Chittu Urundai | Green Moong Jaggery Modak

பூரணத்திற்கான பொருட்கள்:
பச்சை பயிறு 1 Cup*
துருவிய தேங்காய் 2 Tablespoon
எள்ளு 2 Tablespoon
துருவிய வெல்லம் 1 Cup
ஏலக்காய் 2-3
தண்ணீர்  2 Tablespoon
நெய் 2 Tablespoon

* 1 Cup = 250ml

வெளிமாவுக்கான பொருட்கள் :

அரிசி மாவு 1/2 Cup
கோதுமை மாவு / மைதா2 தேக்கரண்டி 
உப்பு ஒரு சிட்டிகை 
தண்ணீர் வேண்டிய அளவு 
எண்ணெய் பொரித்தெடுக்க 


Munthiri Kothu | Chittu Urundai | Green Moong Jaggery Modak
Munthiri Kothu | Chittu Urundai | Green Moong Jaggery  balls

செய்முறை :
  1. முதலில் பூரணம் செய்து கொள்ளலாம். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து பச்சை பயிரை பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும். வறுத்த பச்சை பயிரை ஒரு தட்டில் எடுத்துக்கொள்ளவும் 
  2. அந்த வாணெலியில் எள்ளு போட்டு வறுக்கவும். எள்ளு வெடிக்கத் தொடங்கியதும் எள்ளை எடுத்து தட்டில் கொட்டிக்கொள்ளவும் 
  3. மறுபடியும் அதே வாணெலியில் தேங்காய்த் துருவலை போட்டு பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும் 
  4. வறுத்த எல்லாப் பொருட்களை ஆறவைத்து ஏலக்காய் சேர்த்து மிக்ஸியில் நன்றாக பொடித்துக்கொள்ளவும் 
  5. ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் வெல்லம் மற்றும் தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும்
  6. வெல்லம் கரைந்ததும் அந்த கரைசலை வடிக்கட்டி மறுபடியும் அடுப்பில் வைத்து கெட்டியாகும் வரை கொதிக்க வைக்கவும்.
  7. ஒரு பாத்திரத்தில் அரைத்த பருப்பு+வெள்ளம்+தேங்காய்+எள்ளு பொடியை கொட்டவும் 
  8. அதனுடன் நெய் விட்டு நன்றாக கலந்து கொள்ளவும். பிறகு கெட்டியாக இருக்கும் வெல்லக்கரைசலை சிறிது சிறிதாக ஊற்றி நன்றாக கிளறவும் 
  9. கிளறின கலவையிலிருந்து சிறு சிறு உருண்டைகளாக செய்துகொள்ளவும் 
  10. இப்பொழுது வெளிப்புற மாவுக்கான செய்முறை பார்ப்போம். ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, கோதுமை மாவு, சிட்டிகை உப்பு போட்டு கலந்துக்கொள்ளவும் 
  11. தண்ணீர் சிறுது சிறிதாக விட்டு பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும் 
  12. ஒரு அடிகனமான வாணெலியில் எண்ணையை காயவைத்துக் கொள்ளவும் 
  13. பருப்பு வெல்ல உருண்டைகளை மாவில் தோய்த்து மெதுவாக எண்ணையில் போட்டு பொன்னிறமாக பொறித்துக்கொள்ளவும் 
  14. அதே முறையில் அனனைத்து உருண்டைகளையும் பொரித்து எடுத்துக் கொள்ளவும் 
  15. உருண்டைகள் வெளிப்புறத்தில் முறுமுறுப்பாகவும் உட்புறத்தில் மென்மையாகவும் இருக்கும்  
  16. சுவையான முந்திரி கொத்து ரெடி!
  17. Munthiri Kothu | Chittu Urundai | Green Moong Jaggery Modak
    Munthiri Kothu | Chittu Urundai | Green Moong Jaggery Modak

கருத்துரையிடுக

 
Top