விஷேஷம் அல்லது மங்களகரமான நாள் அன்று பாயசம் செய்வது நமது மரபாகும் அதிலும் முப்பருப்பு பாயசம் மற்றும் அரிசி பருப்பு பாயசம் மிகவும் வழக்கமாக செய்யப்படும் பாயசம் வகை. மிகவும் எளிமையான பாயசம். எந்த பாயசத்தில் நான் பால் உபயோகப்படுத்தியிருக்கிறேன். பாலிற்கு பதிலாக தேங்காய்ப்பாலை கூட உபயோகப்படுத்தலாம்.



செய்முறை நேரம் மற்றும் பரிமாறும் அளவு:
தயாரிப்பு நேரம் 5 mins
சமைக்கும் நேரம்15 mins
பரிமாறும் அளவு4
செய்முறை வகைஇனிப்பு
சமையல் வகை தென்னிந்தியா


Arisi Paruppu Payasam
Arisi Paruppu Payasam
தேவையான பொருட்கள் :
பாசிப்பருப்பு2 டேப்ளேஸ்பூன்  
பச்சரிசி 2 டேப்ளேஸ்பூன் 
கடலை பருப்பு 1/2 டேப்ளேஸ்பூன்
துருவிய வெல்லம் 5 டேப்ளேஸ்பூன்
ஏலக்காய்பொடி  1/2 டீஸ்பூன்  
காய்ச்சின பால் 1 Cup
முந்திரி 4-5
காய்ந்த திராட்சை 5
நெய் 1டீஸ்பூன் 

Arisi Paruppu Payasam
Arisi Paruppu Payasam



Method:
  1. வாணெலியை அடுப்பில் வைத்து, 1/2 டீஸ்பூன் நெய் விட்டு, அரிசி மற்றும் இதர பருப்புகளை வறுக்கவும். பருப்பு பொன்னிறமாக வறுபட்டவுடன், தீயை அணைக்கவும் 

  2. வறுத்த பொருட்களை ஒரு பாத்திரத்தில் எடுத்து கொள்ளவும். அதனுடன் 1/2 கப் பால் மற்றும் 1 கப் தண்ணீர் சேர்த்து பிரஷர் குக்கர் இல் சமைத்து எதுத்து கொள்ளவும். 2-3 விசில் வந்ததும் குறைத்த தீயில் 10 நிமிடங்கள் வேகவிடவும் இதனால் அரிசி பருப்பு நன்றாக குழைவாக வெந்துவிடும் 

  3. வெந்த அரிசி பருப்புப்பாய் நன்றாக மசித்துக்கொள்ளவும் 

  4. அடுப்பில் வாணெலியை வைத்து, நெய் விட்டு, உடைத்த முந்திரி மற்றும் திராட்சை போட்டு நன்றாக பொன்னிறமாகும் வரை வறுக்கவும். வறுத்த முந்திரி மற்றும் திராட்சையை தட்டில் எடுத்துக்கொள்ளவும். 

  5. அதே வாணெலியில் துருவிய வெல்லம் மற்றும் 1 டேப்ளேஸ்பூன் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.வெல்லம்  கரைந்ததும் அதை வடிகட்டி மறுபடியும் அடுப்பில் வைத்து கொதிக்க வைக்கவும் 

  6. வெல்லக்கரைசல் கொதிக்க ஆரம்பித்தவுடன், மசித்த அரிசி மற்றும் பருப்பை போட்டு நன்றாக கிளறவும் 

  7. அரிசி,பருப்பு மற்றும் வெல்லம் எல்லாம் சேர்ந்து கொதித்ததும், பால், வறுத்த முந்திரி, திராட்சை, ஏலக்காய் போடி போடு ஒரு தரம் கலந்து பின்பு தீயை அனைத்து விடவும் 

  8. சுவையான அரிசி பருப்பு பாயசம் ரெடி!
  9. Arisi Paruppu Payasam
    Arisi Paruppu Payasam


கருத்துரையிடுக

 
Top