கொழுக்கட்டை போல நெய் அப்பமும் ஒரு அருமையான மற்றும் முக்கியமான நெய்வேத்திய பண்டமாகும். அதிலும் கிருஷ்ணா ஜெயந்தி, ஆவணி அவிட்டம், கார்த்திகை தீபம் போன்ற மிக முக்கியமான பண்டிகைகளின் பொழுது நெய் அப்பம் செய்வது நமது பழக்கமாகும். நெய் அப்பம் செய்வது மிகவும் எளிமையானது. இப்பொழுது நெய் அப்பம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.



செய்முறை நேரம் மற்றும் பரிமாறும் அளவு:
தயாரிப்பு நேரம் 1 மணி நேரம் 
சமைக்கும் நேரம்15 நிமிடங்கள் 
பரிமாறும் அளவு25 அப்பம் 
செய்முறை வகைஇனிப்பு
சமையல் வகை தென்னிந்தியா

Appam
Appam




தேவையான பொருட்கள் :

பச்சரிசி 1 கப் *
துருவிய வெல்லம் 1 கப் 
துருவிய தேங்காய் 2 டேப்ளேஸ்பூன் 
வாழைப்பழம் 
ஏலக்காய்பொடி  1/4 டீஸ்பூன் 
சமையல் சோடா **1சிட்டிகை 
நெய் 1/4 கப் 
* 1கப்  = 250ml
**  அப்பம் மென்மையாக வர சமையல் சோடா உபயோகப்படுத்தலாம் ஆனால் அது அவசியமான மூல பொருள் கிடையாது வேண்டுமென்றால் சேர்த்துக்கொள்ளலாம்.

Appam
Appam

செயல்முறை :
  1. அரிசியை ரெண்டு முறை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். அரிசியை தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். ஒரு மணி நேரத்திற்கு பிறகு தண்ணீரை வடித்து அரிசியை மிக்ஸியில் எடுத்துக்கொள்ளவும்  

  2. அரிசியை நன்றாக தண்ணீர் விடாமல் அரைத்துக்கொள்ளவும். பிறகு, துருவிய தேங்காய், வாழைப்பழம், ஏலக்காய் பொடி போட்டு மறுபடியும் அரைக்கவும் 

  3. பிறகு துருவிய வெல்லம் சேர்த்து மறுபடியும் அரைக்கவும். வெல்லம் சேர்த்ததும் அப்பம் மாவு கொஞ்சம் நீர்த்துக்கொள்ளும் அதனால் தான் அரிசியை அரைக்கும் பொழுது தண்ணீர் சேர்க்காமல் அரைக்க வேண்டும். நமது அப்பம் மாவு தயார் 

  4. இப்பொழுது நம்மில் பலரிடம் பணியாரம் சட்டி உள்ளது அதனை உபயோகித்து அப்பம் செய்வது மிகவும் எளியது. பணியார கல்லை தீயில் வைத்து, ஒவ்வொரு குழியிலும் 1/2 டீஸ்பூன் நெய்யை விடவும். நெய் சூடான பிறகு, ஒரு சின்ன கரண்டியால் ஒவ்வொரு குழியிலும் மாவை ஊற்றவும். அடிப்புறம் வெந்ததும் அப்பத்தை மெதுவாக திருப்பவும். நெய் கொஞ்சம் தாராளமாக விட்டால் அப்பம் தானாகவே திரும்பி கொள்ளும். அப்பம் மறுபுறமும் வெந்ததும் வெந்த அப்பத்தை எதுத்து தட்டில் வைக்கவும்.இந்த முறையில் மீதி உள்ள மாவில் அப்பம் செய்து முடிக்கவும் 

  5. இனிமையான அப்பம் ரெடி!
  6. Appam
    Appam


குறிப்பு : அப்பம் எண்ணெயில் உடைந்து போனால் 2 டீஸ்பூன் அரிசி மாவு அல்லது கோதுமை மாவை அப்பம் மாவில் சேர்த்து கலந்தால் அப்பம் எண்ணெயில் உடையாமல் நன்றாக வேகும்.
Next
This is the most recent post.
Previous
பழைய இடுகைகள்

கருத்துரையிடுக

 
Top