உளுந்து களி புரத சத்தில் அதிகமானது மற்றும் கொழுப்பு சத்தில் குறைவானது. பெண்களுக்கு மிகவும் அருமையான மற்றும் ஆரோக்கியமான ஒரு உணவாகும். இளம் பெண்கள் பருவமடையும் போது எந்த எளிய மற்றும் ருசியான உளுந்து களி இடுப்புக்கு வலுமையை கொடுக்கும். இந்த ஆரோக்கியமான உளுந்து களி உண்டு வந்தால் மகப்பேறு காலத்தில் உடலுக்கு வலிமையை தரும். இப்பொழுது உளுந்து களி செய்முறை பார்ப்போம்.



செய்முறை நேரம் :
தயாரிப்பு நேரம் 5 mins
சமைக்கும் நேரம் 20 mins
பரிமாறும் அளவு 18-20
செய்முறை வகை இனிப்பு 
சமையல் வகை தென்னிந்தியா 
Ulundhu kali Recipe | Urad Dal Kali Recipe
Ulundhu kali Recipe | Urad Dal Kali Recipe

Ingredients:
உளுத்தம் பருப்பு 3/4 Cup*
பனைவெல்லம் 1.5 Cup
ஏலக்காய் 3-4
உப்பு a Pinch
நல்லெண்ணெய் 2 Tablespoon
தண்ணீர்  1/2 Cup
பாதாம் / பிஸ்தா அழகுபடுத்துவதற்கு (விருப்பப்பட்டால் )


Ulundhu kali Recipe | Urad Dal Kali Recipe
Ulundhu kali Recipe | Urad Dal Kali Recipe

செய்முறை :
  1. ஒரு ஆதி கனமான வாணலியை அடுப்பில் வைத்து, உளுத்தம் பருப்பை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். குறைந்த தீயில் வைத்து மெதுவாக வறுக்கவும். 
  2. வறுத்த உளுத்தம் பருப்பை ஆறவைத்து மிக்ஸி ஜாரில் எடுத்துக் கொள்ளவும் 
  3. பருப்புடன் ஏலக்காய் போட்டு நன்றாக பொடித்துக் கொள்ளவும் 
  4. ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, பனைவெல்லத்தையும் தண்ணீரையும் விட்டு கொதிக்கச் செய்யவும் 
  5. ஒரு சிட்டிகை உப்பு போட்டுக்கொள்ளலாம். உப்பு இனிப்பை தூக்கிக் காட்டும் 
  6. வெல்லம் கரைந்ததும், மற்றோரு பாத்திரத்தில் வெல்லக்கரைசலை வடிகட்டவும். 
  7. மறுபடியும் வடிகட்டின வெல்லக்கரைசலை அடுப்பில் வைக்கவும் 
  8. வெல்லம் கொதிக்க ஆரம்பித்தவுடன் அரைத்த உளுத்தம் பொடியை கொஞ்சம் கொஞ்சமாக வெல்லக்கரைசலுடன் சேர்த்து கைவிடாமல் கிளறவும் 
  9. வெல்லமும் உளுந்து பொடியும் நன்றாக சேர்ந்ததும், நல்லெண்ணையை சிறிது சிறிதாக விட்டு விடாமல் கிளறவும். நெய் உபயோகிக்கலாம் ஆனால் நல்லெண்ணெய் நல்லது 
  10. கிளறின காளி நன்றாக சேர்ந்து பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் பொது அடுப்பை அணைத்து வாணெலியை இறக்கவும் 
  11. கையால் தொடமுடியும்பொழுது சிறு சிறு உருண்டைகளாக பிடித்து பாதாம் / பிஸ்தா அலங்கரிக்கவும் 
  12. உளுந்து காளி உருண்டைகளை காற்று புகை முடியாத டப்பாவில் போட்டு மூடி வைக்கவும் 
  13. வேண்டியபோது எந்த அருமையான சத்துள்ள உளுந்து காளியை உண்டு மகிழவும்  
  14. Ulundhu kali Recipe | Urad Dal Kali Recipe
    Ulundhu kali Recipe | Urad Dal Kali Recipe

கருத்துரையிடுக

 
Top